அக்கரைப்பற்று பொலிசார் அட்டாளைச்சேனையில் நடாத்திய நடமாடும் சேவை -படங்கள்








பைஷல் இஸ்மாயில் -

க்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைபிரதேச செயலகத்தின் உதவியுடன், பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (21)அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் fநடைபெற்றது.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இச்சேவை மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையில் ஆள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுதல், பொதுமக்கள் சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள பிரச்சினைகள், பற் சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவம், பொதுமக்களுக்கானபொதுச் சுகாதார பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும்நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில்நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ்அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்ட, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேசசெலயாளர் ரீ.ஜே.அதிசயராஜ் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -