அரச அதிகாரிகள் தமது கடமைப் பொறுப்புகளிலிருந்து விலகியவர்களாக ஒருபோதும்செயற்படக்கூடாது

பைஷல் இஸ்மாயில் -

ரச அதிகாரிகள் தமது கடமைப் பொறுப்புகளிலிருந்து விலகியவர்களாக ஒருபோதும்செயற்படக்கூடாது. மக்களின் பணிகளை இலகுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அரசஅதிகாரிகளை நியமித்து சேவை வழங்குவதற்கான அதிக வசதி வாய்ப்புக்களையும் செய்துவருகின்றதென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் நடமாடும்சேவை அட்டாளைச்சேனை அந்-நூர் வித்தியாலத்தில் இன்று சனிக்கிழமை (21)நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவில் சற்றுஇடைவெளியான நிலைமை காணப்பட்டது. அந்த நிலைமைகள் இன்று மாறிவருகின்றது.பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான உறவை மேன்மேலும் பலப்படுத்துவதன் மூலம் குற்றச் செயல்களை பாரியளவில் குறைத்துக் கொள்ள முடியும். பொதுமக்களுக்குபொலிஸார் மீதுள்ள அச்சம், சந்தேகமான நிலமைகள் மாறி நட்புறவைகட்டியெழுப்புவதுக்கான சந்தர்ப்பமாக இவ்வாறான மக்கள் நடமாடும் சேவைள் அமையும்என்பதில் ஐயமில்லை.

இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் மூலம் கடந்த யுத்தகால சூழ்நிலைகள் மற்றும்இயற்கை அனர்த்தங்களினால் காணாமல் போன பிறப்புச் சான்றிதழ்கள், அடையாளஅட்டைகள், பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் தீர்வெட்டப்படாத பல விடயங்களுக்கு மக்கள்தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இன்றய நவீன உலகில் காலம் மிகவும்அருமையாகவும், பெறுமதிமிக்கவையாகவும் காணப்படுகின்றது. 

அந்த வகையில்அதிகாரிகளின் உதவிகளை தேடிவரும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை காலத்தைஇழுத்தடிப்புச் செய்யாமல் அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்குவதற்கு சித்தமானவர்களாகஇருக்க வேண்டும். என்பதுடன் அர்பணிப்புடன் சேவை வழங்குபவா்களாகவும் இருக்கவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -