வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடவேண்டும் -நீதிபதி கண்டிப்பான உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாட பவானி சிங் 2 நாட்களில் தயாராகிவிட வேண்டும் என்று நீதிபதி குமாரசாமி கண்டிப்புடன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு கடந்த 31 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதாகரன் தரப்பு வழக்கறிஞரின் வாதமும் முடிவடைந்த நிலையில் மேலும் 2 நாட்கள் கேட்டு அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைதததாகத் தெரிய வருகிறது.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு அடுத்து நீங்கள் வாதாடுவீர்களா என்று நீதிபதி பவானி சிங்கிடம் கேட்டார்.

அவர் மேலும் 5 நாட்கள் அவகாசம் கேட்கவே, இரண்டு நாள் சனி, ஞாயிறு என்பதால் அந்த அவகாசத்தை எடுத்துக்கொண்டு வாதாடத் தயாராக வேண்டும் என்று நீதிபதி குமாரசாமி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -