இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கலந்து சிறப்பித்ததுடன் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து இன்றைய சுதந்திரமான சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்காகவும் வாழ்த்துக்கூறி நாட்டு ஜனாதிபதியின் நல்லாட்சியான சிறந்த ஆட்சிக்கும் ஆசிவேண்டி பிரார்த்தனையும் செய்தனர்.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.நக்பர் கூறுகையில்: நம்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சி இலங்கை சிறுபான்மை மக்கள் மாத்திரமன்றி மூவின மக்களும் சந்தோஷமாகவும் நின்மதியாகவும் வாழக்கூடிய ஒரு பெரும் நல்ல சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. இந்நிலமை என்றும் தொடர பிரார்த்திக்கிறேன் என்று தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.