புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமகிப்பட்டுள்ளார், இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கையளிக்கப்பட்டது/
இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள மேஜர் ஜெனரல் கிரிசாந்த த சில்வா 2013 ஆகஸ்ட் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இலங்கை இராணுவத்தில் பதவி நிலை பிரதானியாக செயலாற்றினார்.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் படைத் தலைவராகவும் செயலாற்றிய அவர் திறமையான அனுபவமுள்ள அதிகாரியாவார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
