நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இது குறித்து முத்தையா முரளிதரன் கருத்து தெரிவிக்கையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் தோல்வியால் பிரச்சனை இல்லை. அவர்கள் பலம் வாய்ந்த அணி.
அடுத்து வரப் போகும் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும்.
இலங்கை அணி கடந்த 20 ஆண்டுகளில் அதிக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. எனவே இலங்கை அணியை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
