பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் அதிகரித்த நுளம்பு, நோயாளிகள் விஷனம்!

இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)

பொத்துவில் பிரதேசத்தில் உயிர் கொல்லி டெங்கு நோய் பரவியுள்ள பிரதேசங்கள் அடையாலம் காணப்பட்டு பொத்துவில் பொது சுகாதார அதிகாரிகளால் 2015.01.23ம் திகதி பொதுமக்கள் விழிப்பூட்டப்பட்டதோடு, சுகாதார அதிகாரிகள் கள நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.

டெங்கு போன்ற பல் நோயின் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் வாழ்விடமான வைத்திய சாலையிலும் நுளம்பின் தொல்லை என்றால் நோயாளிகள் எங்கே செல்வது?. இவ்வாறு பொத்துவில் வைத்திய சாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளி தனது வேதனையை இவ்வாறு தெரிவித்தார். நோயினால் ஏட்படும் வேதனையை சகித்துக்கொண்ட போதிலும் நுளம்பின் கடியினை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் கூரினார்.

வைத்திய சாலையின் அதிகரித்த நுளம்பில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு நுளம்பு வலை கேட்டபோது, வீட்டில் இருந்து தருவித்து கொள்ளுமாறு பதிலளிக்கப்பட்டதாக இன்னுமோர் நோயாளி முனுமுனுத்துக்கொண்டு சென்றார். நுளம்பு வலைளை வீட்டில் இருந்து தருவிப்பதே வைத்திய சாலையின் வளமையாக இருக்கின்றது.

வைத்திய சாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகள் பிரேத்தியேகமாக மின்சார நுளம்பு மட்டையினை பயண்படுத்துகின்றனர். இதனால் எழும் ஒலியால் நுளம்புக் கடிக்கு மத்தியில் அவதியோடு உரங்கும் நோயாளிகள் விழித்தெலும் துற்பாக்கிய நிலையும் வைத்திய சாலையில் காணப்படுகின்றது.

பொத்துவில் வைத்திய சாலையின் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகள் நுளம்பால் எதிர் நோக்கும் சிரமத்தை கருத்தில் எடுத்து பொத்துவில் ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியகட்சர், பொத்துவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் நிருவாகத்தினரும் இது விடயத்தை கருத்தில் கொண்டு வைத்தியசாலை விடுத்திக்கு தேவையான நுளம்பு வலைகளை பெற்று கொடுக்குமாறு இச்செய்தியூடாக வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -