67 வது சுதந்திர தினம் மறந்து போகுமா?

டந்த வருடம் சுதந்திர தினத்தை திட்டமிட்ட அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமூகம் கொண்டாடியது. 

முஸ்லிம்கள் தமது நாற்றுப்பற்றை உரிய முறையில் வெளிப்படுத்த வேண்டும் எனும் கருத்து கடந்தமுறை பரவலாக பேசப்பட்டது. சுதந்திர தினத்தை பற்றிய கரிசனை காட்டாத முஸ்லிம் சமூகம் திடீரென வெளிக்கிட்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்த போது அது வித்தியாசமாக நோக்கப்பட்டது. இனவாத சக்திகளின் முஸ்லிம்களை பற்றிய தவறான சித்தரிப்புகளை முறியடிக்க முஸ்லிம்கள் கடந்த சுதந்திர தினத்தை ஓர் அறிய வாய்பாக பயன்படுத்தினர். இவ்விடயத்தில் ஜம்மியதுல் உலமா பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

எனினும் அண்மைய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இனவாத செயற்பாடுகள் குறைவடைந்துள்ள இத்தருத்தில் இலங்கையின் 67வது சுதந்திர தினம் 2015-02-04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. ஆட்சி மாற்றத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது எனும் எண்ணத்;தில் இச்சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் மறந்து விட்டார்களோ? என யோசிக்கத் தோன்றுகிறது.

சுதந்தி தினத்தை கொண்டாட சென்ற வருடத்தை போன்ற ஓர் திட்டமிடப்பட்ட செயற்பாடு முஸ்லிம்களிடத்திலு; காணக்கிடைக்கவில்லை. இது முஸ்லிம்களை சில எதிர்மறையான தோற்றப்பாட்டை ஏற்கடுத்துமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தமக்கு பிரச்சினை வரும்போதுதான் முஸ்லிம்கள் இன ஜக்கியத்தையும் நாற்றுப்பட்டையும் பேசுகிறார்கள் என பெரும்பான்மை மக்கள் எண்ண இடமுள்ளது. எனவே இது தொடர்பில் ஜம்மியதுல் உலமா கூடிய கரிசனை காட்டவேன்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -