எம்.வை.அமீர்-
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச மக்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி சொல்வதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் உள்ளிட்ட குழுவினர் வருகைதருகிறனர்.
ஹிருணிகாவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தின் போது சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேட்பு மண்டபத்தில், ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.
முன்னால் ஜனாதிபதி சந்திரிகா நாளை பொத்துவில் விஜயம்:
இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கிருனிகா பிரேமசந்திர மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் நாளை(8) பொத்துவில் நோக்கி வருகை தரவுள்ளனர்.
முன்னால் பொத்துவில் மக்கள் வங்கி கிளையின் முகாமையளர் சுபையிர் அவர்களின் தலைமையில் மக்கள் சந்தி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்கள் சந்திப்பு பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருக்கும் சுபையிர் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் நாளை காலை 09மணியலவில் நடைபெற இருக்கின்றது.
