முஸ்லீம்கள் கொண்டாடிய சுதந்திர தின நிகழ்வில் சந்திரிக்கா






அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுண்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திரதினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க - கடந்த 2 வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லீம்களது பள்ளிக்குள் உடைத்துக் கொண்டு பாய்ந்தார்கள். 

பல்வேறு அவர்களது கலை கலாச்சார அம்சங்களில் உட்புகுந்து இம்சைப்படுத்தினார்கள். அந்த விடயங்களிணை கவணிப்பதற்காகவே இந்த சூறா சபை கூட உருவாகியது என நினைக்கின்றேன். இந்த நாட்டில் தற்போதைய மைத்திரியின் ஆட்சியை மாற்றுவதற்கு 100 க்கு 100 வீதம் உதவினார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி அந்த இருண்ட ஆட்சி முடிந்துவிட்டது. இந்த நாட்டில் முஸ்லீம்கள் நிம்மதியாகவும் தமது மதக்கடமைகளையும் சுதந்திராகமாகவும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியும். அவ்வாறு ஏதும் நடைபெறின் இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கும். இந்த நாட்டின் வாழும் 4 சமுகங்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் இங்கு வாழமுடியும். 

இந்த நாட்டில் முஸ்லீம்கள் 15ஆம் நூற்றாண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர் என வரலாறு சான்று பகர்கின்றது.

சுகாதார அமைச்சர் ரஜித்த சேனாரத்தின உரையாற்றும்போது–
முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது ஒரு போதும் பெண்களை கொண்டு வரவில்லை அவர்களது முதலாவது கப்பல் எனது தொகுதியான பேருவளையில் தான் வந்து இறங்கியது. நீங்கள் முதலில் சிங்களப் பென்களையே திருமணம் முடித்தார்கள். உங்களது உடம்புகளில் சிங்கள இரத்தமும் கலந்துதான் இருக்கின்றது. ஆகவே நீங்கள் எங்களின் சகோதரர்கள்.

எனது பேருவளைத் தொகுதியில் 31வீதமாக முஸ்லீம்கள் வாழ்கின்றனர். நகரங்களில் 81வீதம் வாழ்கின்றனர். அவர்களது வாக்குகளைக் கொண்டு கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு நீலக் கட்சிக்கு வாக்குகளை அதிகரித்துக் கொடுத்தேன். 

இன்றும் பேருவளை மக்கள்; என்னுடன்தான் இருக்கின்றார்கள். மைத்திரியின் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம்கள் 95 வீதமும் தமிழர்கள் 85வீதமும் வாக்களித்துள்ளனர். ஆனால் அவர்களது கட்சித் தலைவர்கள் வருவதற்கு முன்னமே முஸ்லீம்கள் மைத்திரியுடன் இணைந்து விட்டனர். 

அதன் பின்பே தலைவர்கள் வந்து மைத்திரியிடம் இணைந்தார்கள். அதற்காகவே நான் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுடம் மகிந்தவுடன் இருந்து அகன்று வாருங்கள என அன்று கோரிக்கை விடுத்தோம் உங்களது இருப்புக்களை பாதுகாக்க மக்களோடு மக்களாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்தேன். என அமைச்சர் ராஜித்த கூறினார்.

சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது அன்று சேர் பொன் இரமநாதன் அவர்கள் தான் சுதந்திரம் வழங்குங்கள் என்று இலங்கையில் இருந்து பிரிட்டிஸ் பாரளுமன்றத்தில் ஆங்கிலத்தில் அழகாக உறுக்கமாகவும் உரையாற்றினார் அவரே அன்று பிரிட்டிஸ் காரர்களது மனதை உருக்கினார். அதன் பின்னரே அவர்கள் சுதந்திரம தர இணங்கினார்கள். அவரை அப்போது கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்களவர்கள் பல்லாக்கில் வைத்து தூக்கி வந்தனர். அதேபோன்றுதான் கலாநிதி டி.பி ஜயா அவர்கள் டி.எஸ்.சோனநாயக்க எப்.ஆர். சேநாயக்க ஆகியோர்களை சகல இனத்தவர்களும் இணைந்து இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தனர். 

ஆனால் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு கடந்த ஜனவரி 8 ஆம் திகதியோ சுதந்திரக் காற்று முழுமையாகக் கிடைத்துள்ளது. இல்லாவிட்டால் இந்த இலங்கை ஒரு இருண்ட பாதாள உலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நல்லதொரு அடியை அமீர் அலி அடித்து இருந்தார். அதுதான் தனது பாராளுமன்றத்தை பெற்றக் கொண்டு அவர் றிசாத்துடன் மைத்திரியை ஆதரித்து இந்தப் பக்கம் வந்தார். அவ்வாறு தான் மகிந்தவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதற்காக அமீர் அலியை நான் பாராட்டினேன்.

 நாங்கள் புல தியாகங்கள் புரிந்து உயிரையும் கையில் பிடித்துக்கொண்டுதான் இந்த நல்லாட்சியை ஏற்படுத்தினோம். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டி முன்னெடுத்த யுத்தததில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அதனையே சமமாக சகலரும் அனுபவிக்க வேண்டும். இந்த நாடு சகல இன மக்களுக்கும் சம உரிமையானதொரு நாடாகும். 

சிலர் இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களுக்கு இங்கு வாழும் உரிமை இல்லை எனக் கூறினார்கள். பொதுபலசேனாவுக்கு எதிராக பேருவளை பிரச்சினையின்போது பகிங்கரமாக அவர்களை வாதிட்டு எதற்கும் தயார் நிலையில்தான் இருந்தேன். என அமைச்சர் ராஜித்த சோனரத்தின உரையாற்றினார்.

இந் நிகழ்வில் சட்டத்தரணி ஜாவீத் யுசுப், சூறாக் கவுண்சிலின் தலைவர் டொக்டா தாரீக் மஹ்முத், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மல ரண்ஜித் தேவசிறி, நீதிஅமைச்சர் ராஜபக்சவும் உரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -