அளுத்கம தொடக்கம் தெஹிவளை வரையான பிரதான நீர்குழாயில் ஏற்பட்டுள்ளகசிவினால், கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று பிற்பகல் 3 மணி வரை சில பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை,நுகேகொடை, கொஹூவல, வெள்ளவத்தை, பாமன்கடை, கிருலப்பனை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கசிவு நேற்றிரவு ஏற்பட்டுள்ளதுடன், அதனை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -