சுலைமான் றாபி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீனின் "வாழ்வின் ஒளி" வாழ்வாதார உதவிகள் வழங்கும் 8வது நிகழ்வும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் கௌரவிப்பும் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (22) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
நிந்தவூர் நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம். றியாஸ், கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஹசன், வைத்தியர் எம்.ரி.எம். முனீர் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இம்முறை நிந்தவூரில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 38 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)