எம்.எம்.ஜபீர்-
காரைதீவு பிரதேசத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பெருவிழா (21)நேற்று நந்தவன வாசிகசாலை வளாகத்தில் காரைதீவு ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் டாக்டர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, அரசியல் தலைவர்கள், யுவதிகள், பொதுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பிரதேச அபிவிருத்தி, சுயதொழில், இளைஞர், யுவதிகளிற்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் என்பனவும் ஆராயப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)