பள்ளிவாயலில் 25 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா பலாஹி




பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்;குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பெரிய மௌலானா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் செயலாளர் விரிவுரையாளர் எம்.எச்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் தலைவரும்,சமூக சேவையாளரும்,நஸீலா ஹாட்வெயார் உரிமையாளருமான ஜ.எல்.அக்பர் ,பெரிய மௌலானா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி என்.எம்.நவ்பர் (பலாஹி) உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள், மஹல்லாவாசிகள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி)யின் சேவையை பாராட்டி பள்ளிவாயல் மற்றும் பொது மக்களினால் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -