பொத்துவில் மாவட்ட வைத்திய சாலை அண்மையில் ஆதார வைத்திய சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் போது தமிழ் மொழியை பேசும் அதிக வைத்தியர்கள் கடமையாற்றினர்.
தற்போது இவ் வைத்திய சாலையில் கடமை புரியும் 14க்கு வைத்தியர்களில் 10 பேர் நோயளிகளுடன் தமிழில் சரியாக உரையாட முடியாத பெரும் பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்களாவர்.
இதனால் தினம் சிகிச்சைக்காக செல்லும் 250க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் நோயினை எடுத்துகூறுவதில் மொழிப்பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் நோய்களை பற்றி அறிந்து கொள்வதில் வைத்தியர்களும் பெரும் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்சினையினால் மருந்துகள் மாற்றிப்பரிந்துரை செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றது. மேலும் பெரும் பணத்தைச் செலவு செய்து வெளிப்பிரதேச வைத்தி சாலைக்கு செல்லவேண்டிய நிலைகுள் வருமையில் வாடும் நோயாளிகள் தல்லப்படுகின்றனர்.
எனவே தமிழில் பாண்டித்துவம் பெற்ற வைதியர்களை நியமித்து சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருப்புடையவர்கள் முன்வர வேண்டும்.
