ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கிழக்கு முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஷ் நசீர் அஹமட் அவர்கள் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் ஒலுவில் கிராமத்தின் வெளிச்ச வீட்டு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு பராமரிப்பின்றி கடந்த 15வருடங்களாக பாவனைக்குட்படாதிருக்கும் 'அஷ்ரப் நினைவில்லத்தினை' உடனே புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்குமாறு தனது இணைப்பு செயலாளரான எஸ்.எல்.எம்.பழில் அவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கேற்ப இணைப்புச் செயலாளர் அவர்கள் புனரமைப்பு நடவடிக்கையின் ஆரம்பமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.அமானுல்லாவுடன் பரீட்சார்த்த விஜயமாக அங்குசென்று திட்ட முன்னெடுப்பிற்கான நிலமைகளை இன்று அவதானித்தார்.
தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பெரும்திட்டங்களான தெ.கி.பல்கலைக்கழகம்,ஒலுவில் துறைமுகம் ஆகியவற்றின வளர்ச்சியினை அருகிலுள்ள 'அஷ்ரப் நினைவில்லத்திலிருந்து காணுதல் வேண்டும் என்ற அத்தலைவரின் கனவினை நனவாக்கும் திட்டத்தின் முதற்படியாகவே இப்புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

இந்த நினைவில்லத்தினை புனரமைத்து கட்சிப் பணிகளுக்கான கிழக்கின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதன் மூலம் உயிரோட்டமுள்ளதாக செயற்படவைப்பதே நோக்கமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)