சுகாதார ராஜங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி இம்மாதம் 23ம் மற்றும் 24ம்,25ம் திகதிகளில் விஜயம்

மீரா.இஸ்ஸடீன்-

ம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள வைத்திய சாலைகளுக்கு சுகாதார ராஜங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி இம்மாதம் 23ம் மற்றும் 24ம்,25ம் திகதிகளில் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி 23ம் திகதி திங்கட் கிழமை கல்முனை ஆர்.டீ.எச்.எஸ்.அலுவலகம்,சாய்ந்தமருது,இறக்காமம்,மத்திய முகாம்,மருதமுனை,காரைதீவு,நிந்தவூர்,ஒலுவில்,பாலமுனை,அட்டாளைச்சேனை வைத்தியசாலைகளுக்கும்

24ம் திகதி செவ்வாய்க்கிழமை கல்முனை,சம்மாந்துறை,அக்கரைப்பற்று,பொத்துவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும்விஜயம் செய்யவிருப்பதுடன் அன்றைய தினம் திருக்கோவில்,அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

25ம் திகதி புதன்கிழமை களுவான்சிக்குடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

.இவ் விஜயத்தின் போது வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வைத்திய அதிகாரிகளிடமும் அமைச்சர் ஹஸனலி கலந்துரையாடவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -