முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்ட அதாஉல்லா அணியின் முக்கியஸ்தகர்கள் !


சுலைமான் றாபி-

திர்வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள இந்த தறுவாயில், தலைமைத்துவங்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்து கட்சி தாவல்களும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் (01.02.2015) பாலமுனை பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரசின் பாலமுனை முக்கியஸ்தர்கள் சிலர் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் முன்னிலையில் பொத்துவில் பிரதேச சபையில் வைத்து அக்கட்சியில் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளருமான எம்.ரி. ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, இளைஞர் அமைப்பாளர் ஐ.ஏ.சிராஜ் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தகர்கள் ஸ்ரீ.ல.மு.காவில் இணைந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -