நிஸ்மி-அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் முதன்மை நிலை இரண்டில் பிரவேசிக்கும் மாணவர்களின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் கண்காட்சியொன்று கல்லூரியின் அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.ஹுஸைன் மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்து ஏனைய அதிதிகளுடன் இணைந்து மாணவர்களின் ஆக்கங்களைப் பார்வையிட்டார்.
தொடர்ந்தும் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் எஸ்.றினோஸ்டீனின் தலைமையுரையைத் தொடர்ந்து அதிதிகள் உரையாற்றினார்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)