த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி காவத்தமுனை மில்லத் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 'பதுர்தீன் இஸ்ஹாக்' (வயது 13) என்பவரே இவ்வாறு உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றங்கரையோரம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர் நீராடுவதற்காக ஆற்றில் இறங்கிய சமயமே நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுஸைன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
%2Bcopy.jpg)