அஸ்ரப் ஏ சமத்-
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் ஏற்பாட்டில் அம்பாறை மவாட்டத்தில் சனிக்கிழமையும் (31) ஞாயிற்றுக்கிழமை (1)ஆம் திகதியும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோறுக்கு மாபெரும் வரவேற்பு வைபவங்கள் நடைபெற உள்ளன.
கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் மற்றும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோறுக்கு பொத்துவில் தொட்டு மருதமுனை வரையும் இறக்காமம் தொட்டு சென்றல்கேம் வரையும் 2 நாற்களும் வரவேற்பு வைபவங்கள், மக்கள் சந்திப்புக்கள், பொதுக்கூட்டங்கள், ஊரவலம் வருதல் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக செயலாளர் நாயகம் ஹமீட் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் கட்சியின் முக்கிய உறுப்பிணர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பிணர்கள் சிப்லி பாருக், சுகைர் மற்றும் பிரதேச சபைகளது தலைவர்கள் உறுப்பிர்களும் கலந்து கொள்கின்றனர்.
சனிக்கிழமை – நாளை – காலை 09.00 மணிக்கு மாவடிப்பள்ளி
09.30 சாய்ந்தமருது வெலிபேரியன் சுனாமி கிராமம்
10.00 மத்தியமுகாம், 12.30
இஸ்லாமபாத் பி.பகல் 03.00 மணி ஓழுவில், 03.45 மணி பாலமுனை 04.30 அட்டாளைச்சேனை, 05.30 மணி மாளிகைக்காடு
ஞாயிற்றுக்கிழமை (1) காலை 10.00 மணி பொத்துவில் 01.00 மணி இறக்காமம், 02.00 மணி வரப்பத்தாஞ்சேனை, 03.00 மணி நாற்பெட்டிமுனை, 03.30 மருதமுனை பி.பகல் 05.00 மணிக்கு கல்முனை சாய்ந்தமருது ஊர்வலம் வருதல் பொதுக்கூட்டம் கல்முனை சாஹிராக் கல்லூரி அருகில் உள்ள பௌசி பீச் மைதாணத்தில் நடைபெறும்.
.jpg)