மஹிந்த அரசில் பிள்ளைகளும் தாய்மார்களும் அழுதார்கள்..!- அமைச்சர் ஹலீம்

இக்பால் அலி-

ற்போது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனையில் இந்நாட்டில வாழும் சகல தரப்பினரையும் சந்தோசப்படுத்தும் வகையிலான வரவு செலவுத் திட்டமாக அமைந்துள்ளது. 

இது சாதாரண , மத்திய தர மக்கள் முதல் உயர் வர்க்கம் வரை பெரும் வரப்பிரகாசங்களை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

நேற்று முன் வைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கத்தினுடைய வரவு செலவு திட்டம் தொடர்பாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பொது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தனர். 

தம் சிறு குழந்தைகளுக்கு கூட தாய்மார்கள் பால் மா வாங்கிக் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள். அழும் அந்தக் குழந்தைகளுடன் அந்த தாய்மார்கள் அழுதுபுலம்புவார்கள். 

 இந்தப் பால்மாவுடைய விலை கணிசமான அளவு குறைந்ததினால் தாய்மார்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ளனர். அத்துடன் எரிவாயு பிரச்சினையும் பொது மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தன. இதன் விலை குறைப்பு என்பது எல்லா மக்களையும் திருப்தியடைச் செய்யுமளவுக்கு உள்;ளன.

அதேபோல முச்சக்கர வண்டிக்காரர்கள். அரசதுறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமையல் எரிவாயு,, சீமெந்து விலை, ரின் மீன் உள்ளிட்ட பல அத்தியவசியப் பொருட்களின் விலை குறைப்பினால் குறைந்தளவு மாதாந்தம் 10000-15000 ரூபாவுக்கு மேல் பணம் சேமிக்க முடியும் எனவும் நல்லாட்சிக்கான 100 வேலைத் திட்டத்தின் கீழ் மேலும் இம்மக்கள் கூடுதலான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -