நிந்தவூரில் குடிகாரர்களின் அடாவடித்தனம்!

முஹம்மட் ஜெலீல்-

நிந்தவூரில் புணரமைக்கப்பட்ட வீதிகள் அனைத்துக்கும் நிந்தவூர் பிரதேச சபையினால் பெயர் பலகைகள் இடப்பட்டுவருகின்றன அந்தவகையில் சென்ற மூன்று நாட்களுக்கு முன் நிந்தவூருக்கும் கரைதீவுக்கும் இடையிலுள்ள வெட்டாறு முகத்துவாரம் கடற்கரை வீதிக்கான பெயர் பலகை நடுவப்பட்டு மூன்றே நாட்கள் கழியாத வேளையில் இன்று பகல் அவ்வீதியில் உள்ள பெயர் பலகை ஒன்றினை இனத்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அதில் சில பாகங்கள் வீசப்பட்டு கிடந்தமை காணப்பட்டன .

இது தொடர்பாக அவ்வீதி அருகாமையிலுள்ள மக்களிடம் வினாவிய போது அவர்கள் கூறுகையில்,

இவ்வீதியினூடாக நிந்தவூரிலுள்ள சில குடிகாரர்கள் காரைதீவுக்கு சென்று குடித்துவிட்டு இவ்வீதியினூடாக தொடர்ந்து சத்தமாக கத்திக்கொண்டு செல்வதாகவும் சில வேளைகளில் அவ்விடத்தில் நின்று அவர்கள் சண்டையிடுவதாகவும், இப்பெயர் பலகையையும் அவர்கள்தான் உடைத்திருப்பார்களென அவ்விடத்திலுள்ள மக்கள் உறுதியாக கூறுகின்றார்கள்.

அம்மக்கள் மேலும் கூறுகையில் உண்மையில் இதுபோன்ற காட்டுமிராண்டிதனமான செயலை ஒரு சாதாரண மனிதனான எவராலும் செய்ய முடியாது, இச்செயலை உண்மையில் இவ்வீதியினால் செல்லும் குடிகாரர்களே செய்துள்ளார்களென மக்கள் உறுதியாக கூறுகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -