கடற்தொழில் செய்ய தடுக்கப்பட்ட பொத்துவில் மீனவர்கள் உரிமை கேட்டு போராட்டம் -படங்கள்

 இர்ஸாத் ஜமால் எம்.எ-
பொத்துவில் பிரதேச ஜலால்தீன் சதுக்க கரைவலை மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கடற்தொழிலை மேற்கொள்ள முடியாமல் கடற்தொழில் உத்தியோகத்தர் ஜவ்பர் அவர்களால் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கரைவலை தொழிலை நம்பி வாழும் சுமார் 600 குடும்பங்களும் 1000ற்கு மேற்பட்ட மீனவர்களும் அவதிப்படுகின்றனர்.

இப்பிரச்சினையினை மீனவர் சங்கத்தினர்களால் உயர் அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்ற போதும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. இனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் இன்று (26) காலை 8 மணிக்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜலால்தீன் சதுக்க கரைவலை மீன்பிடி இடத்தில் ஆர்பாட்டதை ஆரம்பித்த ஆர்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவாரு பொத்துவில் பிரதேச செயலகத்தினை நோக்கி நகர்ந்தனர்'.

பொத்துவில் பிரதேச ஏழை கரைவலை மீனவர்களின் தற்கால மற்றும் எதிர்கால வாழ்வாதார நிலை என்ன? 

'அடிக்காதே அடிக்காதே ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே’.
'மாற்று மாற்று கடற்தொழில் அதிகாரி ஜவ்பரை மாற்று'.
'புதிய அரசே எமது பிரச்சினைக்கு தீர்வை தா' 

போன்ற வாசங்கள் ஆர்பாட்டக்காரர்கள் ஏந்திய சுலோகங்களில் எழுதப்பட்டிருந்தன.

பிரதேச செயலகத்தினை அடைந்த ஆர்பாட்டகார மீனவர்கள் பிரதேச செயலாளர் என்.எம் முஷர்றத் அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர். குறித்த மகஜரில் தடையினை தகர்த்தவேண்டும், கடற்தொழிலை மேற்கொள்வதற்கான அணுமதிப்பத்திரத்தினை பெற்றுத்தர வேண்டும் என்பன பிரதான கோரிக்கைகலாக எழுதப்பட்டிருந்தது.

மகஜரை பெற்றுக்கொண்ட செயலாளர் முஷர்றத் 'இவ் மீனவர்களின் பிரச்சினைகள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்த மகஜரினை உரிய அதிகாரிகளுக்கு அணுப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன்' என ஊடங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஊடங்களுக்கு இவ்வாறு தனது கருத்தினை தெரிவித்தார்

 'இப்பிரதேச மீனவர்கள் பரம்பறை பரம்பறையாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். குறித்த தொழில் தடைக்கு எனது கண்டனத்தினை தெரிவித்துகொள்கின்றேன். அணுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்த போதும் இது வரை அணுமதிப்பத்திரம் வழங்கப்படாமால் தொடர்ச்சியாக ஏமாற்றுப்பட்டு வரும் அப்பாவி மீனவர்ள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாமல் தடைவிதிக்கப்பட்டுள்ளனர் . 

பொத்துவில் பிரதேசத்தை பூர்வீகமாக கொல்லாத கடந்த முப்பது வருடங்களாக இப்பிரதேசத்திற்கு வருகை தரமால் இருக்கின்ற அம்மாந்தோட்டையினை பூர்வீகமாக கொண்ட விதாராச்சி மாயதுன்ன போன்ற சிங்களவர்களுக்கு பிரதேச செயலகம் அணுமதிப்பத்திரம் வழங்கி இருக்கும் வேலையில் இப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட கடலையே நம்பி வாழ்நது வரும் மீனவர்கள் தடைசெய்யப்பட்டிருப்பது வேதனை தரும் ஒரு விடயமாகும்' என்று கூரினார்.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர்,பாலமுனை,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற அனைத்து பிரதேசங்களிலும் இத்தடை இல்லாமல் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் வேலை பொத்துவில் கரைவலை மீனவர்களுக்கு பிரதேசத்தை சேர்ந்த கடற்தொழில் அதிகாரி தடைவிதித்திருப்பது வேடிக்கையானதாகும்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -