அக்கரைப்பற்று வலய அட்டாளைச்சேனை கேட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தமிழ்மொழி மூலம் கல்விகற்கும் மாணவர்களுக்கான விஞ்ஞானம் மற்றும் கணித பாடப் பத்தகங்கள் இதுவரை கிடைக்கவில்லை என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கன்றனர்.
தரம் 6 மற்றும் 10 இல் தமிழ்மொழி மூலம் கல்விகற்கும் அக்கரைப்பற்று வலய அட்டாளைச்சேனை கோட்ட மாணவர்களக்கான விஞ்ஞானம் மற்றும் கணித பாடப் பத்தகங்கள் இதுவரை வழங்கப்படாமையினால் குறித்த பிரிவில் கல்விகற்கும் மாணவர்கள் பெரும் சிரமங்கள எதிர் நோக்கி வருகின்றனர்.
தற்போது முதலாம் தவணை ஆரம்பித்து மூன்று வாரங்கள் கடந்தும் தங்களுக்குரிய முக்கியமான பாடப் புத்தகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் குறித்த பிரிவில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு முதலாம் தவணை பரீட்சையை எதிர்நோக்குவது மிக கஷ்டமான காரியமாகும் என பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவிக்கும் இதேவேளை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் பாடசாலை அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
பரீட்சைகளை எதிர்நோக்குகின்றவர்கள் மாணவர்கள்தான். அதிபர்களோ, ஆசிரியர்களோ அல்ல அவர்கள் தங்களுக்குரிய பாடவிதானங்களை முடித்தாலும் முடிக்காவிட்டாலும் மாணவர்கள் தங்களின் பரீட்சைக் காலம் வந்தால் எப்படியும் பரீட்சையை எழுதித்தான் ஆகவேண்டும். அதனால் ஏற்படும் சிறமங்களை எதிர்கோள்கின்றவர்கள் மாணவர்களேயாகும்.
எனவே குறிப்பிட்ட தரங்களில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை மிக விரைவில் வழங்குவதற்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் இருக்க அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் உடனடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு இம்மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கும் இதேவேளை குறிப்பிட்டவர்களுக்கு முறைப்பாட்டு கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
