இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கிடைக்கவில்லை எனவும் கடந்த 9 ஆம் திகதியே நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் இன்றைய ஜனாதிபதி வீதி சமிக்ஞை சட்டங்களை பின்பற்றி வாகனத்தில் செல்லும் தலைவர்.
ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளை இனிமேல் மூட வேண்டிய அவசியமில்லை. பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையான சுதந்திரம் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
