வெளிநாட்டு வேலை வாய்ப்பு நலனோம்பு அமைச்சின் பொத்துவில் பிரதேசப் பிரிவினால் சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஒரு தொகுதி பாடசாலை கற்றல் உபகரணங்களை இன்று 01.29.2015 பொத்துவில் பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்தது.
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முசர்ரத் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் சுவாட் அமைப்பின் திட்டமிடல் உத்தியோகத்தர் எஸ்.லோஹிதன், பொத்துவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். அலிமுடின், வெளி நாட்டு வேலை வாய்ப்பு நலனோம்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.சி. மனாப், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலைப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை மாணவர்களுக்கான பொதிகளை சுவாட் நிறுவனம் எஸ்டிசி நிதியில் இருந்து வழங்கி வைத்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)