இந்த நாட்டில் வாழுக்கின்ற இருபது இலட்ச்சம் முஸ்லிம்களுக்கும் சொந்தமான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்ஸ்ஸியின் தவிசாளரும், கட்ச்சியை உறுவாக்குவதற்கு மிக முக்கியமாக இருந்தவரும், கட்ச்சியின் இஸ்தாபகர்களில் முக்கியமாக இருக்கின்றவரும் கல்குடாவின் ரசியல் தலைமையுமான பிரதி அமைச்சர் அமீர் அலி நான்கு வருடங்கள் பதவி அந்தஸ்து இல்லாமல் வேதனையோடு, அவருடன் சேர்த்து கல்குடா மக்களும் அவரின் ஆதரவாளர்களும் இருந்த பொழுது கட்ச்சியின் தலைமையானது அரசாங்கத்தோடும், பசில் ராஜபக்ஸ்ஸவோடும், வாக்குறுதி தந்த அரசின் முக்கியஸ்தர்களோடும் எல்லா வகையிலும் பேச்சுவார்ததைகளில் பல முறை ஈடுபட்டும் எங்களை அவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். எல்லா சந்தர்பங்களிலும் அரச தரப்பினர் நயவஞ்கதனமாகவே நடந்து கொண்டனர்.
கல்குடா மக்களும் ஓட்டமாவடி பள்ளிவாயலும் அதற்கு சாட்ச்சியாக உள்ளது. அவர்கள் பள்ளிவாயலுக்குள் வந்து எமக்கு வாக்குறுதி அளித்ததையும் இந்த கல்குடா மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே கட்ச்சியானது யாரையும் ஏமாற்றி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளவில்லை. எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி எமக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தையே கட்ச்சியும் சகோதரர் அமீர் அலியும் பெற்றுக் கொண்டோம். என சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு கல்குடாக்கு முதன் முதலாக வருகை தந்ததை முன்னிட்டு ஓட்டமாவடியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் வர்த்தக வானிபதுறை அமைச்சருமான றிசாட் பதுர்டீன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்துக்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக், எம்.எஸ்.சுபைர்.
முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் லெப்பை ஹாஜி, சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி, பிரதி தவிசாளர் நெளபர் ஆகியோரும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டதுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராலியும் எஸ்.எல்.எம்.சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமியின் விசுவாசியுமான எம்.எம்.உவைசும் மேடைக்கு சமூகமளித்திருந்தார்.
முன்னதாக பிரதி அமைச்சரும், அதீதிகளும் ரிதிதென்ன , ஜெயந்தியாய ,நாவலடி போன்ற கிராமங்களில் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து பிறைந்துரைச்சேனை நூரிய்யா பள்ளிவாயலுக்குச் சென்று மெளவி மஜீத் அவர்களின் துவா பிரார்த்தனையுடன் அப்பிரதேச மக்களுடனான சந்த்திப்புக் கூட்டமும் இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எதிராக பிரதி அமைச்சரின் அதிருப்தியாளர்களால் கல்குடாவில் அரசியல் சேறு பூசும் ஆயுதமாக கையாளப்பட்டு வருகின்ற அஸ்ஸஹீத் மொஹைதீன் அப்துல் காதரின் பெயர் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதது சம்பந்தமான விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆரம்பமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி. அஸ்மியின் முயற்ச்சியினால் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் எல்லைப் பாதையாகவும் அஸ்ஸஹீத் மொஹைதீன் அப்துல் காதர் வாழ்ந்து மரணித்த வருடைய வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு ஞாபகர்த்தமக அன்னாருடை பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையும் அமைச்சர் றிசட் பதுர்தீனாலும் பிரதி மைச்சர் அமீர் அலியினாலும் திரை நீக்கம் செய்யப்பட்டது முக்கிய விடயமாகவும் புதியதோர் அரசியல் திருப்பமாகவும் எல்லோராலும் பார்க்கப்பட்டது.
மேலும் உரையாற்றிய அமைச்சர் றிசாட்;
எமது கட்ச்சி சென்ற அரசினை ஒரு போதும் ஏமாற்றி தேசிய பட்டியலை பெற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அரசை விட்டு போக மட்ட்டோம் என்று அரசிடம் வாக்குறுதி அளித்து விட்டு அமீர் அலியினுடைய தேசிய பட்டியலை பெற்றுக் கொள்ளவுமில்லை. அல்லது மஹிந்த ராஜபக்ஸ்ஸவுக்கு அதரவளிப்பதற்காக எமக்கு தரப்படவுமில்லை.எங்களுக்கு தரவேண்டியதையே நாங்கள் பெற்றுக் கொண்டோம்.
அதே போலவே பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் ஏனைய கட்ச்சிகளுக்கும் அரசாங்கம் கொடுத்ததைப் போலவே எமது கட்ச்சிக்கும் தேசிய பட்டியலைத் தந்தார்கள். ஆனால் கல்குடாவில் உள்ளவர்கள் சிலர் நாங்கள் ஏமாற்றி தேசிய பட்டியலைப் பெற்றதாக விமர்ச்சிக்கின்றார்கள்.
நாங்கள் நாட்டில் இருக்கின்ற இருபது இலட்ச்சம் முஸ்லிம்களுக்ளின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்க்காகவும், மக்கள் நிம்மதியான வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக எமது போராட்டத்தினை தற்போது ஆரம்பித்துள்ளோம். அந்த நிலையில் கல்குடாவில் இருக்கின்ற நீங்கள் உங்கள் உங்களின் சக்திமிகதும் அரசியல் சானக்கியமுள்ள அரசியல் தலைமையான அமீர் அலியை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்ற போராட்டத்தில் இறங்கிவிடாதீர்கள்.
எவ்வாறு கல்குடாவில் இருக்கின்ற பிரதி அமைச்சை, அரசியல் தலைமையை, பாராளுமன்ற உறுப்புரிமையை அழித்து, கல்குடா சமூகத்தை அடிமைச் சமூகமாகவும், அரசியல் அனாதைகளாக மாற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட குற்றததை செய்த சமூகமாகிவிடாதீர்கள் என கல்குட்டா மக்களை கேட்டுகொள்வதாக தெரிவித்தார்.
கல்குடா மக்களின் முக்கிய பிரச்சனையாக இருகின்ற தன்னீர் பிரச்சனை, கல்விசார் இரீதியான பிரச்சனைகள், பிரதேசபை சம்பந்தப்பட்ட, காணி சம்பந்தப்பட்ட அலகுப் பிரச்சனைகள் போன்றவற்றை நாங்கள் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இருபது அம்சங்கள் அடங்கிய கோரிக்கையில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளோம்.
அந்த வகையில் கல்குடா மக்கள் கண்னை மூடிக் கொண்டிருந்தாலும் அமீர் அலி அனைத்து பிரச்சனைகளையும் அவரின் தலையில் சுமந்தவராக அவருக்கு கட்ச்சியின் தலைமை பக்க பலமாக இருந்து கல்குடா பிரதேசத்தை கட்டியெழுப்புகின்ற பயனத்தை முன்னெடுப்பொம் என்ற வாக்குறுதிய தருவதாக தெரிவித்தார்.
ஆகவே இந்த கல்குடாவின் தலைமையான அமீர் அலியை கல்குடாமக்களாகிய நீங்கள் இன்னும் ஆறு வருடத்துக்கு மைத்திரிபாலவின் ஆட்ச்சியில் இவருக்கு கிடைத்திருக்கின்ற நாட்டின் முக்கிய அமைச்சசாக கருதுகின்ற பிரதி அமைச்சை வைத்து சமூர்த்தியூடாக எல்லா ஏழை மக்களுக்கும் பொருளாதாரத்தை சீர்செய்வதற்க்கும், வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கும், கல்குட்டா மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காகவும் கல்குடா மக்களாகிய நீங்கள் வீடுவீடாக செல்ல வேண்டும், யார் எதிர்த்து நிற்கின்றார்களோ ,யார் இந்த தேர்தலில் குரோதம் இழைக்க காத்திருக்கின்றார்களோ, காட்டிக் கொடுப்பதற்காகவும், தோற்கடிபதற்காகவும், யார் எத்தனிக்கின்றார்களோ அவர்களிடத்தில் சென்று உண்மைக்காகவும், ஊருக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மன்றாடி கெஞ்சி, ஒன்றுபடச் சொல்லி இன்ஸா அல்லாஹ் வருகின்ற தேர்தல் இந்த நாட்டில் அமோக வக்குகளால் அமீர் அலியை வெற்றிபெறச் செய்து நாட்டின் சிறந்த அமைச்சராக இந்த சமூகத்துக்கு மட்டுமலாமல் நாட்டிம் முழுச் சமூகத்துக்கும் பாடுபடக் கூடிய சிறந்த கல்குடாவின் அரசியல் தலைமைத்துவத்தை பாதுகாத்து தருமாறு கல்குடா மக்களை வேண்டிக்கொண்டார்.
பிரதி அமைச்சர் அமீர் அலி நூரிய்யா பள்ளிவாயலில் நிகழ்த்திய உரையின் காணொளியும், அமைச்சர் றிசாட் பதுர்டீனின் உரையின் விலாவாரியான கணொளிகள் எமத் இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே தரப்படுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)