இலக்கியச் சந்திப்புக்கும், உரையாடலுக்குமான பொது வெளியாய் தோற்றம் பெற்றிருக்கும் "அகர ஆயுதத்தின்" கன்னிக் கவியரங்கு இன்று (31) நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அகர ஆயுதத்தின் தலைவர் கலாபூஷணம் சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் தலைமையில் இடம் பெற்ற இக்கவியரங்கில் இஸ்லாமிய இலக்கியவாதி செய்யது ஹசன் மௌலானா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான எஸ். ஜனூஸ் மற்றும் கிழக்கு மண்ணை பிரதிநிதித்துவப் படுத்தும் 50ற்கும் அதிகமான கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை யாத்து சிறப்பித்தனர்.
இதேவேளை இந்தக்கவியரங்கு மாதந்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)