அக்கரைப்பற்றில் உருவான இளைஞர் படையணியொன்று அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது..!

கொள்கை பேசும் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதற்கான அறைகூவலுடன் இரு வாரங்களுக்கு முன்னதாக அ்கரைப்பற்றில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த இளைஞர் படையணியொன்று தமது அடுத்த கட்ட நகர்வை இன்று வெள்ளிக்கிழமை (2015.01.30) முன்னெடுத்துள்ளனர். 

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான அக்கரைப்பற்று, குடியிருப்பு, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை ஆகிய பிராந்தியங்களில் இன்று ஜூம்மா தொழுகைக்கு பின் "அநீதி ஒழியட்டும் ! அறம் வெல்லட்டும் !!” என்ற தொனிப்பொருளிலான துண்டுப்பிரசுரங்கள் மூலம் நீதியானதும் நேர்மையானதுமான அரசியல் பாதையொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்குழுவினர் தங்களை "மக்கள் தேசிய முன்னணி” என்னும் ஓர் புதிய அரசியல் இயக்கமாக அடையாளப்படுத்தியிருப்பதுடன் இன்னும் 91 நாட்களுக்குள் தங்களது கொள்கை பிரகடணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். 

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் எல்லாத்தரப்பினரையும் நல்லாட்சி ஒன்றுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் முஸ்லீம் மக்கள் மத்தியில் சிறந்த தலைமைத்துவமென்றுக்கான தேடலையும் உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில் இவ் இளைஞர் படையினரது கொள்கை ரீதியாக அரசியலு்க்கான அழைப்பு மக்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதும். இவர்களது செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருப்பதனையும் அறிய முடிகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -