கோழி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க KFCயிடம் உத்தரவு!

கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின. விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -