மு.ஜ.மு.முபஸ்ஸிர்-
புதிய அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக பதவியேற்ற ஸ்ரீ.ல.மு.கா தலைவர் கெளரவ ரஊப் ஹக்கீம் அவர்களை வரவேற்கும் முகமாகவும், பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளாக மக்களால் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளான,ஹெட ஓயா நீர்த்தேக்க பிரச்சினை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை,பொத்துவில் மத்திய கல்லூரியின் உட்கட்டமைப்பு வளங்களின் பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை,கல்வி வலையம் சம்பந்தமான பிரச்சினை,பொது மைதானமின்மை,நில அபகரிப்பு சம்பந்தமான பிரச்சினை,பஸ் தரிப்பிடமின்மை, போன்ற முக்கியமான பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டதின் கீழ் தீர்ப்பதற்காக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாகவும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் MSA. வாசித் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துனைத்தவிசாளர் தாஜுதீன் ஆசிரியர், பிரதேச சபை உறுப்பினர்கள்,உலமாக்கள் கல்விமான்கள், கட்சிப்போராளிகள் உட்பட அனைவரும் கலந்துகொண்டார்கள்.
.jpg)