ரணிலை தோற்கடிக்க மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும்-உதயன் கம்பன்பில

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதயன் கம்பன்பில தெரிவிக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நாட்டைப் போன்றே கூட்டமைப்பிற்கும் மிக முக்கியமானது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவினால், இன்னும் 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க நேரிடும்.

அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். நாட்டில் பிரிவினைவாதம் உருவாகி தனிநாடு ஒன்று உருவாவதனை தடுக்க முடியாது.

பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்ட வேண்டுமாயின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும். வேறு யார் போட்டியிட்டாலும் ரணில் வெற்றியீட்டுவார்.

மஹிந்தவை வெற்றியீட்டச் செய்ய புதிய கூட்டணி ஒன்றை அமைக்கவும் நாம் தயார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -