சுத்தமான குடி நீர் கிடைக்காத காரணத்தால் மக்கள் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளங் காணப்பட்டு அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் குறிப்பாக அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவ்வாறான பாதிப்பை எதிர் நோக்கியுள்ள கல்குடா தொகுதியைச் சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதற்கான செயல் திட்டத்தை அவசரமாக முன்னெடுப்பதாகவும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் உடபட சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வினியோகிப்பதற்கான வழி;வகைகளையும், காத்தாங்குடி பிரதேசத்தில் வடிகாலமைப்பு வசதிகளைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதற்கான விசேட கூட்டம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா மஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 30.01.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், அமைச்சின் மேலதிகச் செயலாளர் முயீனுத்தீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முபீன் மற்றும் பொறியியலாளாகள். அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஊர்ப்பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நிலைமையை எடுத்த விளக்கினர்.
ஐறகம, கித்துள் வாவிகளை உள்ளடக்கி சுத்தமான குடிநிரை பிரஸ்தாப பகுதிகளுக்கு வினியோகிக்கும் பாரிய பணச்செலவிலான செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட ஐந்து ஆண்டுகள் செல்லும் என்ற காரணத்தினால் உன்னிச்சைக் குளத்தில் இருந்து குழாய் நிஐர வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வது பற்றி கவனஞ்செலுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளை பணித்தார்.
காத்தான்குடியில் பாரதூரமான பிரச்சினையாக காணப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரவியல் பொறிமுறையைக் கையாள்வது பயனளிக்கும் என்று அமைச்சர் ஹக்கீம் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)