பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரும் அவர், நாட்டின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து கலந்துரைடலில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுதவிர அவர் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பொதுநலவாயத்தின் முன்னுரிமை தொடர்பில் மற்றும் நாட்டின் தேசிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் மோல்ட்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
