நாமல் ராஜபக்ஷவின் அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள்!

பாராளுமன்ற எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, சஜின் வாஸ் குணவர்தன மற்றும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரான சசிந்திர ராஜபக்ஷ ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகளும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ் வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட போதும் இந்த பஸ் வண்டிகள் ஒருகாலமும் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சின் போக்குவரத்துப் பிரிவு மாதாந்தம் இரண்டு பஸ் வண்டிகளுக்கும் 18 இலட்சம் ரூபாவை குத்தகையாக வழங்கி வருகிறது. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் இயங்கும் வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே அமைச்சில் எவரும் கண்டிராத இந்த பஸ் வண்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இரண்டு சாரதிகள் இந்த பஸ் வண்டிகளை வெளிவிவகார அமைச்சு வளாகத்தில் நிறுத்திச் சென்றதாகவும் அங்கிருந்த உயரதிகாரி ஒருவர் கூறினார். 
DC





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -