வாஸின் இடத்துக்கு சம்பக அதிரடி மாற்றம்!

லங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸின் இடத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பந்து வீச்சு துறையில் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்இ சம்பக ராமநாயக்கவை உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ராமநாயக்க அணியில் சேர்ந்தவுடன் சமிந்த வாஸ் நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை அணியின் நிலைமையை ஆராய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய நியூசிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் பிளெமிங்கிடம் அணியிடம் ஆலோசகராக செயற்படுமாறு கோரி பேச்சுவார்தையில் ஈடுபடஉள்ளார். அவ்வாறு பிளெமிங் ஒத்துகொண்டால் உலகக் கிண்ணத் தொடர் முடியும் வரை அணியில் இருப்பார் என்றார்.

கடந்த 2013 பெப்பரவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் பந்து வீச்சி துறையில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டிருந்த போதும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதில் பந்து வீச்சு துறையில் வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் அண்மையில் இடம்பெற்ற இந்தியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதனையடுத்து சமிந்த வாஸ் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -