பழுலுல்லாஹ் பர்ஹான்-
தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்;தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடக வள நிலையமும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கான விஷேட இணைய ஊடக கருத்தரங்கொன்று 30-01-2015 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நொச்சிமுனை வொயிஸ் ஒப் மீடியா நெட்வோர்க் காரியாலத்தில் இடம்பெற்றது.
தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்;தின் ஒருங்கிணைப்பாளர் ஃப்ரெடி கமகே தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் பிராந்திய ஊடகவியலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அஜந்த பண்டார ரத்நாயக்க, வொயிஸ் ஒப் மீடியா நெட்வோர்க்கின் தலைவர் அருள் சஞ்சித் ,கிழக்கு மாகாண ஊடக வள நிலையத்தின் அமைப்பாளர் தேவ அதிரன் உட்பட மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலயத்தலங்களில் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு செய்திகளை,தகவல்களை பாதுகாப்பான முறையில் அணுகுவது தொடர்பில் தமிழ் மிரரர் இணையத்தளம் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர் ஏ.பி.மதன் விரிவுரை நிகழ்த்தினார்.
இங்கு சமகாலத்தில் உலகலாவிய ரீதியில் வளந்துவரும் தொழிநுட்பத்தில் இணைய ஊடவியலாளர்கள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களை வளப்படுத்தி செய்திகளை ,தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஈமெயில்,பேஸ்புக்,வட்ஸ்அப்,வைபர்,லைன் உட்பட இன்னோரன்ன சேவைகளை இணைய சேவைகளை ஸ்மாட் போனிலும்,கணணியிலும் பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)