ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காம மத்திய குழுவின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மெஸ்டோ அமைப்பின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி அவர்களின் நிதி உதவியில் இறக்காம முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு வாழ்வோதியத் திட்டத்திற்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது இறக்காம பிரதேச சபையின் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி அவர்களின் தலைமையில் இறக்காமம் பொதுச் சந்தை வழாகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி அவர்களும் அதிதிகளாக இறக்காம பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.ஜிப்ரி, எம்.எல்.முஸ்மி, ஏ.அயாத்துபாவா, எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், அவர்களும் மற்றும் இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் எம்.எஸ்.ஹாரூன் அவர்களும் இறக்காமம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவருமான எஸ்.எல்.அர்சுன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதில் பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் கலந்து கொண்டதோடு நன்மைகளை அடைந்தனர்
இறக்காம நிருபர் - எஸ்.எம்.சன்சீர்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)