இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்களை ஆட்கொண்டிருக்கும் மிகப்பயங்கரமான நோய் "பிரதேசவாதம்" என்றால் அதுமிகையாகாது.
மிகப்பிரதானமான பாகுபாடு கிழக்குவாழ் முஸ்லிம்கள்,கிழக்கிற்கு வெளியேயான முஸ்லிம்களாகும். இப்பாகுபாட்டு நோய் ஆட்கொண்டிருப்பது கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களிடையே என்பது உண்மை.
கல்வி,அரசியல்,பொருளாதாரம் இப்பிரதான 3 நிலைகளிலும் கிழக்குவாழ் முஸ்லிம்களே, கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களையும் அடையாளப்படுத்துகின்றனர் என்பதை அவர்கள் மறக்கக் கூடாது...
கிழக்கின் பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையான முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலே இப்பிரதேசவாத நோய் மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
இப்பிரதேசவாதங்களுக்கு மிகப்பிரதான காரணம் அதிகாரங்கள் தனிநபரிடமும்,தனிக்குழுக்களிடமும் தேங்கி நிற்பதே. எனவே,முஸ்லிம் தலைமைகள் அதிகாரப் பரவலாக்கத்தினை செய்ய முன்வருமிடத்து இப்பிரதேசவாத நோய் குறையலாம்.
இப்பிரதேசவாதத்தை விதைத்தவர்கள் ஆளுமையற்ற அரசியல்வாதிகளும், தத்தமது இருப்புக்களுக்குமான சுயநலவாதிகளுமே. .மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் இப்பிரதேசவாத நோய் குறைவாகவே காணப்பட்டது. ஏனெனில்,இந்நிகரில்லாத் தலைவனின் ஆளுமையும்,ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரங்களும்,அபிவிருத்திகளும் சரியாக வழங்கப்பட்டமையே..
ஆனால்,இன்றைய நிலை தலைகீழானது.இதற்குக் காரணம் சுயநலமிக்க அரசியல்வாதிகளால் ஆளுமைமிக்க மக்களின் அரசியல் பிரவேசம் தடுக்கப்படுகின்றமையும், எம்மத்தியில் உள்ள கற்ற சமூகத்தின் பின்வாங்கு தன்மையும், அடிமட்ட மக்களின் ஏமாறு தன்மையும், குறுகிய நோக்கம் கொண்ட மத்திய தர மக்களின் மனநிலையும், உயர்மடடத்தின் ஏமாற்று தன்மையுமாகும்.
எனவே, ஆளுமைமிக்க மக்கள் முஸ்லிம் தேசிய கட்சியினுள் உள்வாங்கப்பட்டு பிரதேச வாதங்களுக்கு அப்பாற்பட்டு மிகப்பொருத்தமானவர்களுக்கு அதிகாரங்களினை பகிர்ந்தளிக்க முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும்.
இதன் போதே முஸ்லிம் மக்களிடையே பிரதேசவாதங்களையும் தாண்டி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.அத்துடன் எமக்கான உரிமைகளையும் இலகுவாக வென்றெடுக்க முடியும்...
Mr.M.A.Jeswath (Pottuvil),
Faculty of Animal Science,
Uva Wellassa University.
