குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் 99% வாக்கு மைத்திரிக்கே அளிக்கப்பட்டது

இக்பால் அலி-

குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் . தமிழ் ஆகிய சிறுபான்மையின மக்களுடைய நூற்றுக்கு தொன்னுத்தொன்பது விகிதமான வாக்குபதிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம், தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக வடமேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ஜே. சீ, அலவத்துவெல தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் மாவத்தகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான ஜே. சீ. அலவத்துவெல வடமேல் மாகாண சபையில் இவ்வாறு இதனைத் தெரிவத்தார்.

அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்
குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலசட்த்திற்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இதில் கணிசமான வாக்குப் பதிவுகள் ஜனாதிபதி மைத்திதிபால சிறிசேவுக்கே இடம்பெற்றுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் 14 தேர்தல் தொகுதிகள் உள்ளன. இதில் இரு தேர்தல் தொகுதிகளிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். 

குருநாகல் தேர்தல் தொகுதியொன்று மற்றையது மாவத்தகம தேர்தல் தொகுதியாகும். மாவத்தகம தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பறகஹதெனிய, மல்லவப்பிட்டிய. தோரயாக ஆகிய பகுதிகளில் ஜனாதிபதியின் வெற்றிக்காக பெரு எண்ணிக்iகாயன முஸ்லிம் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் இப்பிரதேச மக்களுக்கு நான் மாவத்தகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் விசேடமாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.

இந்த நாட்டில் சகலரும் சமமான குடி மக்கள் என்ற உணர்வை கொண்ட நாடாக மிளிர்வதற்கும் அர்த்துபுஷ;டியுடனான நல்லாட்சிக்கான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முழுமையான பங்களிப்பையும் நல்லாதரவையும் தந்த குருநாகல் மாவட்ட அனைத்து சிங்கள, முஸ்லிம், தமிழ் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -