பழுலுல்லாஹ் பர்ஹான்-
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் தாருல் அதர் குர்ஆன் மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25-01-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தாருல் அதர் குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் சாதிகீன், தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸார்,உப செயலாளர் பஸால் ஜிப்ரி ,அஷ்ஷெய்க் அமீருல் அன்சார் மக்கி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையை பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தினார்.
இதன் போது அதிதிகளினால் அல் குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு சான்றிதழும் ,பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் மௌலவி அன்வர் அலி ஜமாலிக்கும் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
இதில் தாருல் அதர் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
குறித்த தாருல் அதர் குர்ஆன் மத்ரஸா காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)