தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
நகர அபிவிருத்தி என்றால் சாய்ந்தமருது தோனாவும் , தாமரைக்குள புனர்அமைப்பும் அல்ல. நகர அபிவிருத்தி அமைச்சு என்பது சகல நாட்டுக்கும்பொதுவானது.
கண்டிக்கும் கல்முனைக்கும் மட்டும் உரிய அமைச்சு அல்ல என்பதை முதலில் சமூகம் உணரவேண்டும் .
இவ்வாறு கண்டிக்கும்கல்முனைக்கும் அபிவிருத்தி நடை முறைப் படுத்த பகிரங்கமாக அறிக்கைவிடுவது நாட்டின் பல இன மக்களிடமும்,பாராளும் மன்ற அமர்வுகளிலும் பலசர்ச்சைகளைக் கொண்டுவர மூல காரணமாக அமையக்கூடும் ,இதனால்மேலும் பிரதேச மற்றும் இனவாதத்தை தூண்டக் கூடும். நகரஅபிவிருத்திகள்நாட்டில் பன்முகப் படுத்தப் பட்டு நடை முறைப் படுத்துதல்வேண்டும்.
இவ்வாறு பன்முகப் படுத்தப் படின் நாட்டில் பிரதேச மற்றும்இனவாதத்தை தவிர்க்க முடியும் . இவ்வாறன ராஜ தந்திர நோக்குகள் அற்றஅறிக்கைள் பிற் காலத்தில் சிறு பான்மைச் சமுகத்தில் பல பார தூரமானவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.
மேலும் பல ஆண்டுகளாக அமைச்சுப் பதவியைக் கவ்விப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு முழுஅ மைச்சினால் கண்டும் காணாமல் போன தோனாவும் , தாமரைக்குளமும் ஏன் இப்போது மட்டும் ஏன் புழுதி தட்டி துடைக்கப் பட வேண்டும் என்பதுதான்தற்போது சமுகத்தின் கேள்விக் குறியாக எழுந்துள்ளது .
இவ்வாறன ராஜ தந்திர நோக்குகள் அற்ற அறிக்கைள் பிற் காலத்தில் அமைச்சுக்களும்,ஆட்சிகளும்,கை மாறும் போது பல பார தூரமானவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு இதுவும் ஒரு கரை ஒர மாவட்டம் என்று புரட்டி எடுக்கப் பட்ட தேர்தல் காலபுரளிக் கதைதான் என்பது நம் கணிப்பு.
இது எதிர் வரும் தேர்தலுக்கான காய் நகர்த்தல் என்பது மட்டும் தெள்ளத்தெளிவு
