தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 35 ஏக்கர் நெற்காணிக்கு நடந்தது என்ன..?

எம். ஏ. அஹமட்-

றைந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம். எச் எம். அஷ்ரப் அவர்களின் அயராத முயற்சியால் அப்போதைய சனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பணிப்புரைக்கமைய அப்போதைய உயர்கல்வி அமைச்சர் கௌரவ ரிச்சட் பத்திரன அவர்களால் உருவாக்கப்பட்டதே தென் கிழக்குப் பல்கலைக்கழகமாகும். 

இப் பல்கலைக்கழகம் அதன் பிரதான பீடங்களை ஒழுவில் கிராமத்திலும் பௌதீக விஞ்ஞான பீடத்தினை சம்மாந்துறை கிராமத்திலும் கொண்டு இயங்குவதுடன் விவசாயபீடத்தினை அம்பாறை மல்வத்தை என்னுமிடத்தில் அமைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு இப்பீடத்தின் களப் பிரயோக நடவடிக்கைகளுக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண பிராந்திய நிலையத்திற்கு அருகாமையில் 35 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நெற்காணி அப்போதைய சந்திரிக்கா அமச்சரவையினால் இப் பல்கலைக்கழகத்திற்கு விடுவிப்பச் செய்திருந்தது.

இருப்பினும் விவசாய பீடத்தினை அமைத்துக் கொள்வதில் காணப்படுகின்ற நடைமுறைச்சிக்கல் காரணமாக இந் நெற்காணிகள் தொடர்ந்தும் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்டடு அதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தினை பல்கலைக்கழக கணக்கில் வரவாகக் காட்டப்பட்டுவந்தது. இவ்வருமானம் 2009.06.21ம் திகதியிலிருந்து இன்றுவரை மயமாக மறைந்துள்ளது என பல்கலைக்கழக வட்டாரங்கள் குறிப்பிடகின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது:

தற்போதைய உபவேந்தராகக் கடமையாற்றும் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் என்பவர் 2009.06.21ம் திகதி ஊழல் நிறைந்த ஆட்சியாளரான மஹிந்த கொம்பனியினால் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் இந்த முப்பத்தைந்து ஏக்கர் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நெற்காணி தொடர்பான எந்த தகவல்களையும் பல்கலைக்கழக ஆளுகை சபைக்குக் காட்டாமல் தமது முகவரான நிந்தவூரைப்பிரப்பிடமாகக் கொண்ட ஒருவர் மற்றும் தமது சமையல் காரரான காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவும் நெற்செய்கைமேற்கொண்டு அதில்வருகின்ற வருமானத்தை அவரும் அவரது முகவர்களும் பங்கிட்டுக் கொள்வதாக பல்கலைக்கழக நிதிப்பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சாதாரணமாக அரச உடமையொன்றை குத்தகைக்கு விடுவதாயின் நிதிப்பிரமான ஏற்பாடுகளுக்கமையவாக திறந்த சேள்விச்சபை நடைமுறை பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இவ் உபவேந்தர் மேற்கொள்ளும் அதிகார துஷ்ப்பிரயோகமானது இவர் ஒரு ஊழல் நிறைந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என இவ்வதிகாரி குறிப்பிட்டார். மேலும், இவ் உப வேந்தரது காலத்தில் இந்நெற்காணியின் மூலம் கிடைக்கப்பெற்ற குத்தகைப் பணம் ரூபா ஒரு கோடியே ஐந்து இலட்சம் இவ் உபவேந்தரால் ஏப்பமிடப்பட்டுள்ளதாகவும் இவ் அதிகாரி குறிப்பிட்டார்.

இன்று மலர்ந்துள்ள நல்லாற்சியில் இவ் ஊழல் தொடர்பில் தெளிவான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு இவ் ஊழல் நிறைந்த உபவேந்தரை தண்டித்து தூக்கி எறிவது ஆட்சியளர்களின் பொறுப்பல்லவா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -