அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து மருந்து வகைகள் தொடர்பான சட்ட மூலத்தை சுருட்டிக் கொண்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்கப்போகின்றார்? எனக் கேள்வி எழுப்பும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, குளிர் நீரையும் சூடாக்கி பருகுபவர்தான் மைத்திரிபால சிறிசேன என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டாக்டர் வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தனது அமைச்சுப் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் தக்கவைத்துக்கொண்டு எதனையும் கண்டுகொள்ளாத மைத்திரிபால சிறிசேன நாட்டின் தீர்க்கமான முக்கியமான கால கட்டங்களில் பாராளுமன்றத்தில் எந்தவிதமான வரலாற்று திருப்புமுனையான உரைகளையும் நிகழ்த்தாதவர். பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் அவ்வாறான உரைகளை காணவில்லை.
அத்தோடு மருந்து வகைகள் தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவரும் போது அது தடுக்கப்பட்டது என இன்று கூறுகின்றார்.ஆனால் அவ்வாறு தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக சுகாதார அமைச்சராக அமைச்சுக்குள்ளோ வெளியிலோ அல்லது பாராளுமன்றத்திலோ இவர் வாதாடவும் இல்லை, போராடவும் இல்லை.
இறுதியில் கம்பனிகளின் தேவைக்காக அதிகாரிகள் தயாரித்த மருந்துகள் தொடர்பான சட்டமூல நகலை ஏற்றுக்கொண்டு அச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதையும் சுருட்டிக்கொண்டார். அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து சட்டமூலத்தை சுருட்டிக்கொண்டவரால் எப்படி நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்? குளிர் நீரையும் சூடாக்கி பருகும் இவரால் நாட்டுக்குதலைமைத்துவத்தை வழங்க முடியுமா என் றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

0 comments :
Post a Comment