பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்-நூலறிமுகம்

நூலறிமுகம்

நூல் : பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்
நூலாசிரியர் : கலாநிதி. செ. இராஜதுரை
வெளியீடு : இராஜதுறை நற்பணி மன்றம், மட்டக்களப்பு
பதிப்பு : மூன்றாம் பதிப்பு


நூலாய்வு : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்

இலங்கை அரசியல் வரலாற்றில் செல்லையா இராசதுரை அழியாத இடத்தைப் பிடித்திருந்த ஒருவர். மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகரின் அழகிய தோற்றத்தை மேலும் ஒழுங்குபடுத்தி அழகுறச் செய்தவர்களில் அவரும் ஒருவர். தமிழுக்கு அமுதென்றுபேர். அந்த அமுதினை சொற்களில் வடிப்பவர் செ. இராஜதுரை. அதனால்தான் அவரை சொல்லின் செல்வர் எனவும் அழைப்பர். இவரது பேச்சில் மயங்காதவர் யாரும் இல்லை. அந்தளவுக்கு இவரது பேச்சுத்திறன் சுவைபடவும், இன்பத்தமிழ் நாவழியே வெளியேறும் விதம் இரசனைக்கு விருந்தாக அமையும். அந்தளவுக்கு அவரது பேச்சு அமைந்திருக்கும்.

இந்த நூல் ஏற்கனவே இரண்டு முறை பதிப்பித்திருந்தன. மீண்டும் அதனை புதிப்பித்து தற்போது மூன்றாவது முறையாக வெளிவந்துள்ளது. எழுச்சிக் கவிஞர் இரா. தவராஜா அவர்கள் இதனை செய்திருக்கின்றார். தன்னுடைய பதிப்பாசிரியர் உரையில் மீன்பாடும் தேன் நாட்டின் தீந்தமிழ் பேச்சாளர் எனத அன்புக்குரிய அண்ணர் செ. இராசதுரை அவர்கள் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வின்சன்ட் மகளீர் பாடசாலையில் ஆற்றிய உரையைப் பற்றி பலர் என்னிடம் பெரிதாகக் கதை;தார்கள். அந்த உரையே இந்த நூல். என்கிறார் பதிப்பாசிரியர் இரா. தவராஜா.

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் கல்லூரியின் உப அதிபர்; திருமதி திரவியம் இராமச் சந்திரா அவர்கள் என்னை அழைத்து தங்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு ஒரு உரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்கள். அதனை நூலாக்கி வெளியிட்டு வெளிவந்துள்ளமையை பாராட்டுகின்றேன். இவ்வுரையினை நூலாக்கியபோது பலரும் அதனைக் கேட்டார்கள் அது என்கைவசம் இல்லை. அக்குறைபாட்டினை என் அன்புத்தம்பி வெளியிட முன்வந்தமை பாராட்டுக்குரியது என்கிறார்; நூலாசிரியர் செ.இராசதுறை

சொற்பொழிவாக இருந்தாலும் இதனுள்ளே பல விடயங்கள் காணப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் ஆற்றிய உரைகள் பிற்காலத்தில் பேசப்படுவதுபோல செ. இராஜதுரை அவர்களின் உரையும் ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் பேசப்படுகின்றன. அதற்கான காரணம் அந்த உரையின் கனதிக்கு அவ்வளவு பெறுமதி. அந்தப் பெறுமதி காலம் கடந்தாலும் அது நல்லதோர் வழிகாட்டுதலையும், விழுமியத்தையும், மாணவர்களுக்கான தேடலையும், மாணவர்களை நல்வழிப்படுத்;தவும், மாணவர்களின் கற்றலையும், எதிர்காலத்திற்குகந்த நற்பிரஜைகள் பாடசாலைகள் விதைக்க வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு பட்ட விடயங்கள் பற்றியெல்லாம் இரத்தினச் சுருக்கமாக பேசியுள்ளமை ஆசிரியர் ஒருவர் புத்திமதி செல்வதைப் போன்று காணப்படுகின்றன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளுள் ஒருவராhன ஆபிரஹாம்லிங்கள் தனது மகன் படிக்கும் பாடசாலையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலகப் புகழ் பெற்றவையாகும். அந்தக் கடிதம் இன்றும் பேசப்படுகின்றது என்றால் அதன் உள்ளார்ந்த கருத்துக்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளத் தேiவாயான அர்த்தங்கள் பொதிந்துள்ளன என்பதேயாகும். அதைப்போன்று சொல்லின் செல்வர் இராஜதுரை அவர்கள் நான் பேசிய பேச்சுக்கள் நூலுருவாக்கம் பெற்று அது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளமை இன்று அவரது பேச்சினைக் கேட்பதுபோலவே எம் காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன. சரி பேச்சைப் பார்ப்போம்.

பாடசாலை மதிற் சுவர்களுக்கு மத்தியில், பாலத்துக் கம்பிகளில் விளையாட்டு மைதானங்களில், கடைத்தெருக்களில், சினிமாக் கொட்டகைகளில், கடற்கரைகளில், இப்படி எங்குபார்த்தாலும் எவரும் எதை எதையோ பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சுக்கள் ஆடிக்காற்றில் அள்ளுண்டுவரும் குப்பை கூழங்களைப் போல் காய்ந்த சருகுகளைப்போல ஒன்றுக்கும் உபயோக மற்றுவையாகப் போய்விடுகின்றன.

அத்தகைய பேச்சுக்களால் நமக்கும் பிரயோசனமில்லை. நாட்டுக்கும் நன்மை இல்லை. காட்டாறு வெள்ளத்தில் அள்ளுப் பட்டுவரும் வண்டல் மண்ணைப்போல பேச்சுக்களும், அம்மண்ணிலே விளையும் நல்ல பயிரைப்போல அதன் கருத்துக்களும் மக்கள் மனதில் நல்லன செய்வனவாய் அமைய வேண்டும். கள்ளிச் செடியைப் போலல்லாது கற்பூரவள்ளிச் செடியைப்போல பேச்சுக்கள் உபயோக முள்ளவையாக அமைய வேண்டும். என ஆரம்பித்து உரையின் கனதியை வெளிப்படுத்தும் விதம் அபாரமானவை.

மேலும், சிறைச்சாலை மதிற்சுவர்களுக்குள் அடங்கிக் கிடைக்கும் கைதிகளைப் போல மாணவ மாணவிகள் பாடசாலை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டங்களுக்குள்ளும் அடங்கி நடக்க வேண்டியவர்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு எதையாவது அழைத்ததற்காக பேசிவிட்டுப் போவோமென்று பலர் எண்ணி வருவதுண்டு. விளங்காத ஒரு எண்கணக்கின் விபரங்களை பலமுறை ஆசிரியரிடம் கேட்டு விளக்கம் பெற நீங்கள் முயலுவதைப் போல உங்கள் சிந்தனையில் முற்றுப் பெறாதிருக்கும் பொருள்கள்பிரச்சினை, மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக்கள் மறு மலர்ச்சித் தூதுவர்கள், அவர்கள் மக்களிடையே வாங்கிப் பழிச்சொற்கள், உலகைத் திருத்திய உத்தமர்கள் அவர்கள் பட்ட அடி, உதைகள், பெண்குலத்துக்குப் பெருமையீட்டித் தந்த தாய்மார்கள்! இவை பற்றியெல்லாம் பேசுமாறு நீங்கள் கேட்கவேண்டும். அத்தகைய பேச்சுக்களில் உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் சிக்கல்கள் புரியாத புதிர்கள் ஆகியவற்றை நீங்கள் துணநிது அவர்களிடம் வினவவேண்டும். விளக்கம் கோரவேண்டும். ஒரு வெற்றுப் பேச்சு மேடையாக உங்கள் சங்கம் நிலவுவதை விடுத்து ஆராய்ச்சி நிலையமாக விளங்குவதை நான் பெரிதும் விரும்புகின்றேன். எனதொடர்ந்து உரையாற்றினார்.

இவரது உரை மாணவர்களின் உள்ளக்கிடக்கைகளை வெளிக் கொணரவைக்கும் வகையில் அன்று அமைந்திருக்கின்றது. இன்றுபாடசாலைகளில் அரசியல்வாதிகளை அழைத்துப் பேசவைக்கின்றனர். அவர்கள் அரசியல் பேசுகின்றனர். படிப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களைப் பேசவேண்டும் என்பதற்கு முன்னோடியாக இவரது பேச்சின் ஒவ்வொரு வரியிலும் மாணவர்களைப் வழிப்படுத்தும் ஆசாரங்கள் நிறைந்துள்ளன. இந்நூலை மாணவர்களும், ஆசிரியர்களும், குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்கள் முன்னே பேச விளைகின்ற அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான நூல். முப்பது பங்களில் இந்த உரை பதிக்கப்பட்டுள்ளது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :