ஜனாதிபதி வேட்பாளராக 10 பேர் கட்டுப்பணம் 2: முஸ்லீம்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!

அஷ்ரப் ஏ சமத்-
.
திர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. 

ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ பர்ஸி மஹேந்திரவும், ஐக்கிய மக்கள் மகாசபா கட்சியின் சார்பில் கலாநிதி நாத் அமரநாத்தும் , இலங்கை தேசிய முன்னணியின் சார்பில் விமல் கீகனகே ,புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பள்ளேவத்தே கமராலகே மைத்திரிபால, சுயேட்சையாக ஐ.எம். இல்யாஸ், அரசியல் கட்சியொன்றின் பெயரில் மௌலவி மிப்லாஹ்ர் ஆகியோரே இத்தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

 இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர். இந்த தேர்தலுக்காக 5 ஆம் திகதி வரை மட்டுமே கட்டுப்பணம் செலுத்த முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :