சாப்பிடுவதற்கும் வசதியின்றி அல்லலுறும் யாழ் மக்கள்- படங்கள்,வீடியோ

டந்த 3 தினங்களாக அடைமழை இப்பகுதியில் பெய்ததனால் நீரில் மிதக்கின்றது யாழ்ப்பாணம் பொம்மை வெளி கிராமம். ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் இப்பிரதேசத்தில் 90 குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் உண்ண உணவின்றி ,தங்க இடமின்றி தவிக்கின்றனர்.இவர்கள் மீது கிராம சேவகர்கள்,பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர் அனுதாபப்படுவதாகவோ,உதவுவதாகவோ தெரியவில்லை.இது வரைக்கும் உதவி செய்வதாக பிரதேச செயலாளர் கூறி இரண்டு கிழமைகள் சென்று விட்டதாக அப்பபகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் இது வரை எது வித உதவிகளோ கிடைக்கவில்லை.உள்ளுர் தனவந்தர்கள் சிலர் முன்வந்து அம்மக்களுக்கு உதவி செய்கின்றனர்.சில உள்ளுர் அரசியல்வாதிகள் என சொல்லப்படுவோர் பாதிக்கப்பட்ட மக்களிற்காக உதவுவதாக ஊடகங்களிடம் உறுதி கொடுத்து வருகின்றார்கள்.

இது தான் இன்றைய நிலைமை ஒவ்வொரு வருடமும் மழையினாலும் ,வெள்ளத்தினாலும் இம்மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.சில வேளை இடம்பெயரும் நிலைமை இவர்களிற்கு ஏற்படுகிறது.நிம்மதியாக இருக்க ஒழுங்கான வீடமைப்பு வசதி இல்லை.ஒழுங்கான வீதி கிடையாது,மின் சார வசதி இல்லை,நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கஸ்டப்படுகின்றனர்.தொழில் செய்வது சிரமமாக உள்ளது இது தான் அம்மக்களின் நிலை.

இதனை வலியுறுத்தி தான் அப்பகுதி மக்கள் வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். 

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். 

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை என்றும் நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அம்மக்கள், வீட்டுத்திட்டத்திலும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இவற்றையெல்லாம் கண்டித்தே வீதியில் உணவு சமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

தற்போது இப்பகுதி மக்களிற்கு அப்பகுதி இராணுவத்தினர் சமைத்த உணவினை வழங்கி வருகின்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :