ஓட்டமாவடி சலாஹிய்யா பாலர் பாடசாலையின் மாணவர் விடுகை விழா- சீரெப்




ட்டமாவடி சலாஹிய்யா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு இன்று வாழைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடெம்பெற்றது. அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், ஜுனைட் நளீமி, முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் உற்பட அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய ஜுனைட் நளீமி இந்த நாட்டின் கல்வித்திட்டம் போட்டித்தன்மை வாய்ந்ததாக அமைந்து விட்டது. 

முஸ்லிம் சமூகம் இதனை எதிர்கொள்வதில் ஏனைய சமூகங்களை விட பல மடங்கு பின்னிற்பதாகவே தெரிகிறது. என்ற போதும் தற்போதைய கல்வி விழிப்புணர்வுக்கு எமது பெற்றோர் தயார்படுத்தப்பட வேண்டும். கர்ர்வர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் எமது பிரதேசத்தில் உரிய இடம் மறுக்கப்படும் ஒரு சிலரது குறுகிய சிந்தனைகள் எதிர்வரும் காலங்களில் சமூகத்தினால் மாற்றியமைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

எனவே பெற்றோர்கள் எதிர்கால எமது பிரதேச கதிரைகளில் தகுதியானவர்களை இருத்துவதர்கான மாற்றம் விரவில் ஏற்படும் எனக்குறிப்பிட்டார். மாணவர்களது பல்வேறு நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. குறித்த பாலர் பாடசாலை மாவட்டத்தில் சிறந்த பாலர் பாடசாலையாக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :