பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான் -
பொத்துவில் செங்காமம் அல் மினா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அதிதிகள் கௌரவிப்பும் இன்று 2014.12.04 வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல் நிசார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முசர்ரத் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கல்விதான் எமது சொத்து கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக பொத்துவில் போன்ற பின் தங்கிய பாடசாலைகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற வெளியூர் ஆசிரியர்கள் எப்பொழுதும் என்றைக்கும் மதிக்கப்படுவார்கள் மேலும் பொத்துவிலின் எல்லைக்கிராமமான செங்காமம் அல் மினா வித்தியாலயத்தில் சேவையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் கல்விப் பணியினை பொத்துவில் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்று பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களுக்கான பொன்னாடையினை வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.நிசார் அவர்கள் போர்த்தினார். அதே நேரம் கணித பாட ஆசிரியர் ஏ. மஜீட் அவர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment